Home வீடியோ ஒரு நாட்டார் பாடலால் பலரைக் கண்ணீர்விட்டுக் கதறியழவைத்த சிறுவன்!

ஒரு நாட்டார் பாடலால் பலரைக் கண்ணீர்விட்டுக் கதறியழவைத்த சிறுவன்!

தன்னலமற்றது தாயின் அன்பு. உலகத்தில் தாயின் கருணைக்கு நிகரான கடவுளென்று எதுவுமே இல்லை.

தாய்மையின் ஒப்பற்ற தியாகத்தினைப் போற்றும் உன்னதமான பாடல்கள் பல்வேறுபட்ட இசைவடிவங்களில் வந்தாலும் நமது தமிழரின் வாய்மொழிப் பாடல் எனப்படும் நாட்டுப்புறப்பாடல்களில் இடம்பெற்றிருக்கின்றமை அற்புதமானதாகும்.

நாட்டுப்புறப் பாடல்கள் எமது மொழி செய்த தவப்பயன் என்றுதான் சொல்லமுடியும். பண்டிதர்களின் இலக்கணப் புடம்போடல்களிலும் பழந்தமிழ் புலவர்களின் செய்யுள் இலக்கியக் கோர்ப்புக்களிலும் சிறைப்பட்டிருந்த தமிழன்னை வெகுசன காலத்தில் மக்களின் குரலாக ஒலிக்க ஆரம்பித்ததிலிருந்தே குன்றா இளமையும் குறைவுறா எழிலும் தன்னகத்தே கொண்டதாக பரிணமித்தது.

ஒரு நாட்டார் பாடலால் பலரைக் கண்ணீர்விட்டுக் கதறியழவைத்த சிறுவன்!

அந்த வகையில் நாட்டார் கருத்தியலிலும் இசை அமைவிலும் விளங்கிய அற்புதமான பாடலை இந்தச் சிறுவன் பாடியுள்ளார். இந்தப் பாடலானது சில வாரங்களுக்கு முன்புதான் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஏராளமான மக்களை கண்ணீர்விட்டு அழவைத்துள்ளது.

குறித்த நாட்டுப்புறப் பாடலை இங்கே நீங்களும் காணொளி வடிவில் பார்க்கலாம்!