Home புலனாய்வு செய்தி மீண்டும் வெடிக்க ஆரம்பிக்கும் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்; விசாரணை தீவிரம்

மீண்டும் வெடிக்க ஆரம்பிக்கும் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்; விசாரணை தீவிரம்

போர் காலத்திலும், அதன் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெருந்திரளான ஆயுதங்களை ஸ்ரீலங்கா இராணுவத்திலுள்ள சிலர் பாதாள உலகக் குழுவினருக்கு இரகசியமான முறையில் விநியோகித்திருப்பது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

குறித்த ஆயுதங்கள் தற்போது பாதாள உலகக் குழுவினர் வசமிருப்பதால் அடுத்து வரும் காலங்களில் ஸ்ரீலங்காவின் பல பகுதிகளிலும் குற்றச் செயல்கள் அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கை புலனாய்வுப் பிரிவுக்கு விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புலிகள் பயன்படுத்திய ரி.-56 ரக துப்பாக்கிகளே இவ்வாறு அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும், ஒரு துப்பாக்கி 75 ஆயிரம் ரூபா வீதம் இராணுவத்தினரால் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் சிங்களப் பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமன்றி பொலிஸ் மற்றும் இராணுவக் களஞ்சியசாலையிலிருந்து திருடப்பட்ட சில ஆயுதங்களும் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து பாதாள உலகக் குழுவினர் அதிகமாக செயற்படுகின்ற பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் பாதுகாப்பு பிரிவின் கவனம் திரும்பியுள்ளது.