Home வவுனியா செய்திகள் வவுனியா பாடசாலையில் அதிகாலையில் நடந்த அட்டூழியம்

வவுனியா பாடசாலையில் அதிகாலையில் நடந்த அட்டூழியம்

வவுனியா மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தின் 80 அடி தற்காலிக வகுப்பறை கொட்டகை அடையாம் தெரியாதோரினால் இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் ஆசிரியர் தினம் இன்று இடம்பெற இருந்த நிலையில் அதிகாலை 12.30 மணியளவில் கிராமத்தவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து பாடசாலையை அலங்கரித்திருந்தனர்.

இதன் பின்னர் இன்று ஆசிரியர் தினத்திற்கான உணவு சமைக்கும் பணிகளுக்காக பாடசாலைக்கு சென்றவர்கள், குறித்த கொட்டகை தீப்பற்றி முழுமையாக எரிந்துள்ளதை அவதானித்துள்ளனர்.

இதனை அடுத்து காலை 6.15 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரண்டரை மணித்தியாலயத்தின் பின்னர் 08.45 மணியளவில் பாடசாலைக்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.