Home சமூக சீர்கேடு மனைவியின் சகோதரியை பிறந்த மேனியுடன் தாக்கிய குடும்பஸ்த்தர்

மனைவியின் சகோதரியை பிறந்த மேனியுடன் தாக்கிய குடும்பஸ்த்தர்

மனைவியின் சகோதரியை பிறந்த மேனியுடன் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் வீதியில் வைத்து தாக்கியுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இவ்வாறு தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் நடைபெற்ற அன்று இளம் குடும்பஸ்த்தர் மதுபோதையில் இருந்தார் என்றும் மாமனாருடன் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் மனைவியின் சகோதரி, தலையிட்டதால் ஆத்திரமடைந்த குடும்பஸ்த்தார் அவரை தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.களுத்துறை மாவட்டத்தில் உள்ள தோட்டப்பகுதி ஒன்றில் இந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்குள்ளான மனைவியின் சகோதரி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை மனைவியின் சகோதரியுடன் நீண்டகாலமாக காதல் பிரச்சினை இருந்தது எனவும் இரண்டாம் தாரமாக திருமணம் செய்வதற்கு அந்த குடும்பஸ்த்தர் முயற்சித்ததாகவும் அயலவர்கள் கூறுகின்றனர்.

குடும்ப வறுமையினால் மனைவியின் சகோதரியை, இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைக்குமாறு அந்த குடும்பஸ்த்தர் கேட்டிருக்கிறார். ஆனால் மனைவியின் தந்தை அதற்கு மறுப்புத்துள்ளார்.

குடும்ப வறுமை இருந்தாலும் கஷ்டப்பட்டு தனது இளைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என்றும் இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய முடியாது எனவும் அடியோடு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால் மாமனாருக்கு கடனாக மாறிக் கொடுத்த பெரும் தொகை பணத்தைக் கேட்டு சர்ச்சை ஏற்பட்டபோது, பிறந்தமேனியுடன் மனைவியின் சகோதரியை தாக்கியதாக அயலவர்கள் கூறுகின்றனர். தாக்குதல் நடத்திய குடும்பஸ்த்தரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.