Home இந்திய செய்திகள் தமிழக பொலிஸாரின் அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்!

தமிழக பொலிஸாரின் அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்!

தமிழக பொலிஸாரின் சார்பில் கோவையில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

அத்துடன், சந்தனக் கடத்தல் வீரப்பன், மலையூர் மம்பட்டியான் ஆகியோர் பயன்படுத்திய ஆயுதங்களும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.கோவை இரயில் நிலையத்திற்கு அருகில் இந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதில், பொலிஸார் பல்வேறு காலகட்டங்களில் அணிந்த சீருடைகள், பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் என்பன பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. அத்துடன், தீயணைப்பு இயந்திரங்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள், பீரங்கிகள் போன்றவற்றுடன் இராணுவத்தில் பயன்படுத்தும் மிக் ரக போர் விமானமும் அந்த இருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பன், மலையூர் மம்பட்டியான் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய துப்பாக்கிகள் உள்ளிட்ட சில பொருட்களை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.