Home விளையாட்டு சங்காவை பிரமிப்பில் ஆழ்த்திய சந்திமால்!

சங்காவை பிரமிப்பில் ஆழ்த்திய சந்திமால்!

பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தினேஷ் சந்திமாலின் தலைமை பிரமிப்பிக்க வைத்துவிட்டதாக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககார கூறியுள்ளார்.

தோல்வியால் சொந்த இரசிகர்களினாலேயே தலைக்குனிந்திருந்த இலங்கை அணி, பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் தலைநிமிர்ந்துள்ளது.அத்தோடு தோல்வியால் துவண்டு போயிருந்த இலங்கை அணிக்கு இந்த வெற்றி புத்துணர்வு அளித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஜாம்பவான் குமார் சங்ககார கூறுகையில்,

“இலங்கை அணிக்கு இது தகுதியான வெற்றியாகும். சந்திமாலின் சிறப்பான தலைமையின் கீழ் இலங்கை கடுமையாக உழைத்தது. ரங்கன மற்றும் தில்ருவானின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் சந்திமால் அழுத்தத்தை எதிர்கொண்ட விதம் சிறப்பாக இருந்தது.

சந்திமாலின் தலைமை பிரமிப்பாக இருந்த அதே சமயத்தில், பொறுப்பை உணர்ந்து துடுப்பாட்டத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டது பாராட்டுகுரியது. சந்திமால் டெஸ்ட் கிரிக்கெட் போன்றே ஒருநாள், ரி-ருவென்ரி போட்டிகளிலும் அணிக்காக விளையாட வேண்டும்.

அவரின் முழு திறமையை இனி தான் நாம் பார்க்க போகிறோம். டெஸ்ட் போட்டியில் 10,000 ஓட்டங்களை சந்திமால் குவிப்பார் என தான் நம்புகின்றேன்” என கூறினார்.