Home வவுனியா செய்திகள் வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இன்று மதியம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பயணி ஒருவரின் பொதியை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது, 915 கிராம் கஞ்சாவினை சட்டவிரோதமாக கொண்டு செல்லமுற்பட்ட குற்றச்சாட்டுக்காக குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனா.

இதில் புத்தளத்தை சேர்ந்த அபிலசன் றிஸ்வான் (வயது 37) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும், இந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்