Home பிரதான செய்திகள் யாழிலும் கொழும்பிலும் பொது உரையாடல்களை நடத்தவுள்ளார் ஐ.நா விசேட அறிக்கையாளர்

யாழிலும் கொழும்பிலும் பொது உரையாடல்களை நடத்தவுள்ளார் ஐ.நா விசேட அறிக்கையாளர்

உண்மைத்தன்மை, நீதி, இழப்பீடு ஆகியவற்றை ஊக்குவித்தல் மற்றும் மீள நிகழாமைக்குஉத்தரவாதமளித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப்பின் விஜயம் தொடர்பான தகவல்களை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஒக்டோபர் 10ஆம் திகதியிலிருந்து 23ஆம் திகதி வரையுள்ள காலப்பகுதியில் அவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.இந்த விஜயத்தின் போது அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மற்றும் மாகாண மட்ட அரசாங்க பதவியினர்கள், சிவில் சமூகத்தினர், சமயத் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் இலங்கையின் சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோரை விசேட அறிக்கையாளர் சந்திக்க அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் திருகோணமலை, மன்னார், அனுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, கண்டி மற்றும் மாத்தறை நகரங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மேலும் இவர் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் இரண்டு பொது விரிவுரைகளை வழங்கவுள்ளதுடன், நாட்டிற்கு விஜயம் செய்துள்ள அனைத்து விசேட ஊடகவியலாளர்களின் நடைமுறைகளைத் தொடர்ந்து, அவருடைய விஜயத்தின் இறுதி தினமான ஒக்டோபர் 23 ஆம் திகதியன்று அறிக்கையாளர்களின் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

விசேட ஊடகவியலாளர்களின் தேவைக்கமைய, அவரது விஜயம் தொடர்பான அறிக்கை ஒன்றினை 2018 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கவுள்ளார்.