Home உள்ளூர் செய்தி சிங்களவர்களுக்கே நாடு! மீண்டும் வெடிக்கும் சர்ச்சைத் தேரர்

சிங்களவர்களுக்கே நாடு! மீண்டும் வெடிக்கும் சர்ச்சைத் தேரர்

இந்த நாட்டில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் காணப்படும், சிங்களவர்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை இருக்கின்றது? என பொதுபல சோனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச நாடுகளின் தேவைகளுக்கு அமைய அரசியல்வாதிகள் சிலர் அரசு சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து புதிய அரசியல் யாப்பினைக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என ஞானசார தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த புதிய அரசியலமைப்பின் காரணமாக நாடு கடுமையாக பாதிப்படையும் எனக் குறிப்பிட்ட அவர், இதில் இருந்து பௌத்தர்களையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள அரசியலமைப்பு நாட்டின் நல்லிணக்கத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர், வடக்கு முதல்வர் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தெரிவித்து வருகின்றனர்.

இவர்களை அனைவரையும் சந்தித்து தற்போது உள்ள அரசியலமைப்பில் நல்லிணக்கம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பது தொடர்பில் கேள்வி எழுப்பவுள்ளதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.