Home உள்ளூர் செய்தி கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை நாவற்குழியுடன் நிறுத்தம்

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை நாவற்குழியுடன் நிறுத்தம்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிய புகையிரத சேவைகள் யாவும் நாவற்குழிவரை மட்டுமே நடைபெறவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கும் நாவற்குழிக்கும் இடையிலான புகையிரதப் பாதையில் உள்ள நாவற்குழி பாலத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளமையினாலேயே அனைத்துப் புகையிரத சேவைகளும் நாவற்குழி புகையிரத நிலையத்துடன் மட்டுப்படுத்தப்படவுள்ளன இந்தப் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளது.

இப்புனரமைப்புப் பணிகள் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பயணிகள் விசேட பேருந்துகள் மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து புகையிரதங்கள் ஊடாக அவர்களது பயணத்தை தொடர ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும் யாழ்.புகையிரத நிலையத்தில் தரித்து நிற்கும் ரயில் மூலம் காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரையான புகையிரத சேவைகள் வழமையான கால அட்டவணைக்கு ஏற்ப நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர் 021-2222271 என்ற யாழ்.புகையிரத நிலைய தொலைபேசி இலக்கத்துடன் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தையடுத்து, யாழ் நோக்கிச் செல்லும் புகையிரத சேவைகளில் பாதிப்புகள் ஏற்படலாம் என நம்பப்படுகிறது.