Home பிரதான செய்திகள் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்கு உதவும் இந்திய அரசு

காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்கு உதவும் இந்திய அரசு

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா, இலங்கைக்கு 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினைத் தந்து உதவி செய்துள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கை புதுடில்லியில் இந்திய ஏற்றுமதி வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் றஸ்குன்கா மற்றும் இலங்கை நிதியமைச்சின் திறைசேரியின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அரச உயர் அதிகாரிகளுக்கு மத்தியில் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த நிதியுதவியின் மூலம், காங்கேசன்துறை துறைமுகம் முழு வசதிகளை கொண்ட வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக இந்த துறைமுகம் பிராந்தியத்தின் முக்கிய கடல் எல்லையின் கேந்திர நிலையமாக திகழும் எனவும், இதனை முன்னிட்டு வடக்கில் பாரிய வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்திய அரசாங்கம் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் என்று இதன்போது உறுதியளிக்கப்பட்டுள்ளது.