Home சினிமா ஓவியாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணமே முடிந்துவிட்டது-சிம்பு..!

ஓவியாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணமே முடிந்துவிட்டது-சிம்பு..!

தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளை அடிக்கடி சந்திப்பவர் என்று பட்டியல் எடுத்தால் அதில் முதலில் நடிகர் சிம்புவின் பெயர் தான் வரும். கடைசியாக AAA பட தயாரிப்பாளருடன் சர்ச்சையில் சிக்கிய சிம்பு இனி நடிக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடித்துவருகிறார். பல அக்ரீமெண்ட்களில் கையெழுத்திட்டு நடித்துக்கொண்டிருக்கும் அவர் ஆங்கிலத்தில் ஒரு படம் தயாரித்து வருகிறார்.

ஓவியாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணமே முடிந்துவிட்டது-சிம்பு..!

அந்த படத்தின் படம்பிடிக்கும் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது தனி ஒருவன், வேலைக்காரன் என சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தான் சிம்பு, நடிகை ஓவியாவுடன் இணைந்து புத்தாண்டிற்கு புதிய பாடல் வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவும் மிக பெரிய ஹிட் அடித்தது.

அதைத்தொடரந்து, நெட்டிசன்கள் சிம்பு மற்றும் ஓவியாவை இணைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருவருக்கும் திருமணம் என்று பேசப்பட்டது. அந்த வகையில் பொங்கலுக்கு ஓவியா ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்குகொண்டுள்ளார் அந்த நிகழ்ச்சிக்கு போன் செய்த சிம்பு இந்த வதந்தி உண்மை என்று கூறியுள்ளார். நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமே முடிந்துவிட்டது என்று ஜாலியாக கூறியுள்ளார் சிம்பு.