Home மருத்துவம் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் அற்புத உடல்நலப் பயன்கள்

சர்க்கரைவள்ளிக் கிழங்கின் அற்புத உடல்நலப் பயன்கள்

‘எக்ஸ்-மென்’ புகழ் அமெரிக்க நடிகை ஒலிவியா மன், தினமும் ஒரு சர்க்கரைவள்ளிக் கிழங்கை வறுத்து சாப்பிடுவதே தனது ஒளிரும் சருமத்தின் ரகசியம் என்று கூறிய பிறகு, எல்லோரும் இந்த சாதாரண சர்க்கரைவள்ளிக் கிழங்கின் அதிசய பலன்களைப் பற்றி அறிந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டினார்கள்! விழாக் காலங்கள், உண்ணாமல் விரதம் இருக்கும் நாட்கள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் மட்டுமே நாம் உண்ணும் இந்த எளிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு (இப்போமியா பட்டாட்டாஸ்), அற்புத பலனளிக்கும் ஒரு அற்புதக் கிழங்காக இருக்கும் என்பதை நாம் எதிர்பார்த்திருகக் மாட்டோம்! ஆரோக்கியத்திற்கு மிகுந்த பலன்களை வழங்கும் பல காய்கள், பழங்கள், கிழங்குகள் இருக்கும்போது, இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு எந்த விதத்தில் வித்தியாசமானது என்று தெரியுமா? மற்றவை உலகில் ஒருசில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும், ஆனால் இது ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமேரிக்கா, கிட்டத்தட்ட உலகின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கக்கூடியது.

இது புதிய ஒன்றா? (Is this the new superfood?)

இது வேரில் முளைக்கும் ஒரு கிழங்கு வகையாகும்.

இதிலுள்ள பீட்டா கரோட்டின் எனும் சிவப்பு-ஆரஞ்சு நிற நிறமி அதிகம் இருப்பதே இதனை அவ்வளவு நல்ல உணவாக மாற்றுகிறது. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இருக்கும் அதிக அளவிலான பீட்டா கரோட்டின் உடலுக்குள் சென்ற பிறகு, அதனை நம் உடல் வைட்டமின் A-வாக மாற்றுகிறது. நமது கண்களின் ஆரோக்கியத்திற்கும், சருமத்தின் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் நமக்கு வைட்டமின் A அவசியமாகும். அதுமட்டுமின்றி, இந்த கரோட்டினாய்டுகள் குறிப்பிடத்தக்க அளவிலான ஆன்டிஆக்ஸிடன்டு பண்புகளையும் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளன என்று கூறப்படுகிறது.

இதில் உள்ள பிற ஊட்டச்சத்துகள்:

வைட்டமின் C: இது ஆரோக்கியமான எலும்புகள் (கொல்லாஜன் வழியாக), ஆரோக்கியமான சருமம் ஆகியவற்றுக்கு உதவுகிறது, குணப்படுத்தும் செயலில் உதவுகிறது, இன்னும் பல நன்மைகளை அளிக்கிறது.
மக்னீசியம்: அழற்சி எதிர்ப்புப் பண்பு கொண்டது, எலும்பு ஆரோக்கியத்திற்கும் செரிமான நொதிகளுக்கும் உதவுகிறது.
தாமிரம் (காப்பர்): இரத்த சிவப்பணுக்கள் மற்றும் கொல்லாஜன் உருவாக்கத்தில் உதவுகிறது.
பேண்டோத்தெனிக் அமிலம் (வைட்டமின் B5): கொலஸ்டிரால் உற்பத்திக்குத் தேவையானது, இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது, ஹார்மோன்களை சீர்ப்படுத்துகிறது. முதுமை அறிகுறிகளைக் குறைக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
வைட்டமின் B6: இது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயோட்டின்: ஆரோக்கியமான நரம்பு மண்டலம், தோல், முடி, நகம் மற்றும் பலவற்றுக்கு இது அவசியமாகிறது.
பொட்டாசியம்: இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
நார்ச்சத்து: நீரிழிவுநோய், எடை அதிகரிப்பு, மலச்சிக்கல், சில வகைப் புற்றுநோய்கள் முதலியவற்றை தடுக்க உதவுகிறது.
வைட்டமின் B1, B2 & B3: வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமான செயல்பாடுகளுக்கும், தோல் மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
பாஸ்பரஸ்: ஆரோக்கியமான எலும்புகள், சிறுநீரகங்களின் செயல்பாடு, தசைகளைத் தளர்த்துதல் ஆகியவற்றுக்கு அவசியம்.
சமைக்கும் முறை (How to cook?)

பொதுவாக இதனை வேக வைத்து அல்லது வறுத்து சாப்பிடுவார்கள். எனினும், அவித்து சாப்பிடும் போது அதில் இருக்கும் அந்தோசயனின்கள் (ஆன்டிஆக்ஸிடண்டுகளையும் மற்றும் அழற்சி எதிர்ப்புச் செயல்பாடு கொண்டவை) இழக்காமல் நமக்குக் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. வேக வைப்பதால் அவற்றின் கிளைசெமிக் குறியீடு (GI) மதிப்பு குறைகிறது என்று தெரியவந்துள்ளது. இதனை அதிக தீயில் துரிதமாக வறுத்தும் சாப்பிடலாம் அல்லது சிப்ஸ் செய்தும் சாப்பிடலாம். ஆனால் இப்படி அடிக்கடி சாப்பிடக் கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடலாமா? (Can people with diabetes eat a sweet potato?)

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் GI அளவு குறைவாக உள்ளதாகக் கருதப்படுகிறது, ஆகவே சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஏற்ற வகையில் உங்கள் உணவைத் திட்டமிடுவதிலும் இது உதவும். இவற்றில் அதிக நார்ச்சத்தும் உள்ளது, ஆகவே நீரிழிவு நோய் உள்ளவர்களும் தனது தினசரி உணவுத் திட்டத்தில் இவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். குறைந்த GI இருந்தால், அந்த உணவு உடனடியாக சிதைத்து செரிக்கப்படாது, அதாவது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவுகளை உடனடியாக அதிகரிக்காது.

மொத்தத்தில், சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துகளை கருத்தில் கொள்ளும்போது, அதனை நாம் கொண்டாட வேண்டும் எனலாம்! எனினும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், இதனை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். சரிவிகித உணவுத்திட்டம் மிகவும் முக்கியம்