Home பிரதான செய்திகள் ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் போராளி மரணத்தில் சந்தேகம்?

ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் போராளி மரணத்தில் சந்தேகம்?

சடலாமாக மீட்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் உறுப்பினரான இனியவன் என்றழைக்கப்படும் தர்மசேனா ரிசிகரன் மரணத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

சாவகச்சேரியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மரணத்திற்கான காரணம் தொடர்பில் குடும்பத்தவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

ஜந்து பிள்ளைகளது தந்தையான அவர் சாவகச்சேரி, டச்சு வீதியில் வசித்து வந்திருந்தார்.

கடுமையான வறுமை காரணமாக கூலி வேலை செய்தேனும் பிழைத்துக்கொள்ளலாம் அரசியல் வேண்டாமென தான் கணவரிடம் கூறி வந்ததாக மனைவி ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் கீழ் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.