Home பிரதான செய்திகள் இதுவரை காலமும் கோட்டபாய கொள்ளை: கடல்படையால் கோடிக்கணக்கில் வருமாணம்

இதுவரை காலமும் கோட்டபாய கொள்ளை: கடல்படையால் கோடிக்கணக்கில் வருமாணம்

இலங்கை கடல்படையால் அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 226 கோடி ரூபா இவ்வாறு வருமானமாக பெறப்பட்டுள்ளது என்பது பெரும் ஆச்சரியம் தான். ஏன் எனில் வழமையாக ஒரு நாட்டு அரசாங்கம் தனது முப்படைகளுக்கும் காசை செலவு செய்வதே வழக்கம். வருமானமாக எதுவும் கிடைப்பது இல்லை. ஆனால் கடந்த வருடம் கோட்டபாய நடத்திவந்த தனியார் ஆயுத மற்றும் பாதுகாப்பு நிறுவனமாக எவன் காட் நிறுவனத்தை இலங்கை கடல்படையினர் தமது வசமாக்கினர்.

இதனால் இந்திய கடல்பரப்பில் செல்லும் பல கப்பல்களுக்கு தற்போது இலங்கை கடல்படை பாதுகாப்பை வழங்கி வருகிறது. துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை சோதனியிடவும் இன் நிறுவனத்தையே கடல்படை பயன்படுத்துகிறது. இதனால் வெளிநாட்டு காசை கோடிக் கணக்கில் இன் நிறுவனம் பெற்றுள்ளது. இதனை இலங்கை ரூபாய்க்கு மாற்றினால் 226 கோடி ரூபா வருகிறது. இது கடந்த 11 மாதத்தில் கிடைத்த காசு. ஆனால் இன் நிறுவனத்தை கோட்டபாய 5 வருடங்களாக நடத்தி வந்தார்.

அப்படி என்றால் அவரது பாக்கெட்டில் எவ்வளவு கோடி தேறியிருக்கும் என்று உங்களால் கணக்கு பார்க்க முடியும்.