Home சமூக சீர்கேடு

வீட்டுக்குள் 25 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தவர் கைது!

SHARE

வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளதோடு, அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்வெட்டித்துறையிலிருந்து அச்சுவேலிக்கு ஒருவர் கஞ்சா கடத்துவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அந்த நபரின் வீட்டில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

அத்துடன் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர் நேற்று(04) கைதுசெய்யப்பட்டார். அந்த நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், விசாரணை நிறைவடைந்ததும் அவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் எனவும் கஞ்சா போதைப்பொருளும் நீதிமன்றில் கையளிக்கப்படவுள்ளதாகவும் அச்சுவேலிப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.