Home சமூக சீர்கேடு ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

மன்னாரில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட மூவரை பொலிஸார் அண்மையில் செய்துள்ளனர்.

மன்னார் மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள், மன்னார் மூர்வீதி மற்றும் உப்புக்குளம் பகுதியில் வைத்து குறித்த மூவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 110 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், மற்றைய நபரிடமிருந்து 60 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக, மன்னார் மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.