Home featured

தமிழனுக்கு வேறுயாரும் எதிரி அல்ல: தமிழனே தான் இந்த ஈனப் பிறவிகள் செய்யும் காரியம்

SHARE

நேற்று வியாழன் முற்பகல் மாவீரர்களின் உறவினா்கள் முன்னாள் போராளிகள் என, பலா் ஒன்று சோ்ந்து பொது நினைவுச் சமாதி ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனா். கிளிநொச்சியில் இந்த பொது நினைவு சமாதி அமைக்கப்பட்டு வந்த நிலையில், பிரதேச சபையின் செயலாளா் க. கம்சநாதனின் முறைப்பாட்டையடுத்து பொது நினைவுச் சமாதி அமைத்த ஆறுபேரை வெள்ளிக்கிழமை(இன்று) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளார்கள் இணையம்

இது தொடா்பாக கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் க.கம்சநாதனிடம் வினவிய போது, சுடலைகளில் ஏதேனும் பணிகளை மேற்கொள்வதாக இருந்தால் பிரதேச சபையின் அனுமதி பெறப்படல் வேண்டும் என்றும் அவ்வாறு எந்த அனுமதியும் பெறப்படாது பணிகள் இடம்பெற்றமையினால் அதனை நிறுத்த கோரியதாகவும் ஆனால் பணியில் ஈடுப்பட்டவா்கள் நிறுத்தாது தனது கடமைகளையும் செய்யவிடாது இடையூறு ஏற்படுத்தினர் எனவும் எனவேதான் முறைபாடு செய்தேன் எனத் தெரிவித்தார்.

ஒட்டு மொத்தத்தில் பிரதேச சபை செயலாளர் கம்சநாதன் தனது சிங்கள விசுவாசத்தை காட்டி விட்டார். அப்பிரதேச மக்கள் எதனையும் பெரிதாக செய்துவிடவில்லை. தமது இறந்த சொந்தங்களுக்காக ஒரு பொதுவான சமாதியை கட்ட முற்பட்டுள்ளார்கள். அவ்வளவு தான். உடனே இதனை பொலிசாரிடமும் , புலனாய்வாளர்களிடம் கூறி, இவர்கள் மாவீரர் துயிலும் இல்லத்தை மீண்டும் அமைக்க முயற்ச்சி செய்வதாக இந்த சிங்கள எலும்புத்துண்டுக்கு அலையும், கம்சநாதன் கூறியுள்ளார். தமிழர்களுக்கு வேறு யாரும் எதிரி அல்ல. இவர்கள் போனற சில ஈனத் தமிழர்கள் தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.