Home சர்வதேச செய்தி ரஷ்ய எல்லையில் அமெரிக்க ராணுவம் : மீண்டுமொரு பனிப்போருக்கான அறிகுறியா ?

ரஷ்ய எல்லையில் அமெரிக்க ராணுவம் : மீண்டுமொரு பனிப்போருக்கான அறிகுறியா ?

பெல்டிக் நாடுகளின் எல்லையில் அண்மைக்காலமாக நேட்டோவை சேர்ந்த அதிகளவிலான அமெரிக்க தரப்பு விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு வருவதாகவும், பதிலுக்கு ரஷ்யா தனது படைகளை குறித்த பிராந்தியத்தில் குவித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

லிதுனியா மற்றும் எஸ்டோனிய உள்ளிட்ட பால்டிக் கூட்டனி நாடுகளிற்கு அவற்றின் அந்நிய நாடுகளிலிருந்து பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக நேட்டோ அமைப்பு கூறிவந்தது. இந்நிலையில் அந்நாடுகளின் கிழக்கு எல்லையான ரஷ்ய எல்லைப் பகுதியில் நேட்டோவைச் சேர்ந்த அதிகளவிலான அமெரிக்க விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா ஊடுறுவியதாக குற்றங்கள் சுமத்தப்பட்ட நிலையில்தற்போது அதிரடிப்படைகளை ரஷ்ய எல்லைப்பகுதியில் குவித்துள்ளமை ஐரோப்பிய பிராந்தியத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நேட்டோ படைகளுக்கான கட்டுபாடுகளை அதிகரிக்க போவதாகவும் ரஷ்ய பெல்டிக் நாடுகளுக்கான உறவை பலப்படுத்துவதற்கு செயற்படவுள்ளதாகவும் கூறிவந்தார்.