Home சர்வதேச செய்தி

வீதி எங்கும் பிணக் குவியல்: சிரியாவில் டாங்கரில் வெடி குண்டை வெடிக்க வைத்த ஐ.எஸ்

SHARE

சிரியாவின் அன்ஸாஸ் நகரில் சற்று முன் பெற்றோல் டேங்கரில் வெடிபொருளை நிரப்பி, அதனை ஒரு மசூதிக்கு முன்னர் வெடிக்க வைத்துள்ளார்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள். இதுவரை 48 பேர் இறந்துவிட்டதாகவும். நூற்றுக்கணக்கான மக்கள் எரிகாயத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில், ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போது பொதுமக்கள் மீது பல தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள். சில மாதங்களில் மட்டும் சுமார் 1,600 பேர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது பெரும் துன்பத்தை தரும் செய்தியாக அமைந்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.