Home வவுனியா செய்திகள் வவுனியாவில் சீனி விலையேற்றம் சிறுவியாபாரிகள் பாதிப்பு!!!

வவுனியாவில் சீனி விலையேற்றம் சிறுவியாபாரிகள் பாதிப்பு!!!


வவுனியாவில் சீனியின் விலை கூடியிருப்பதாலும் நுகர்வோர் பாதுகாப்பு சபையின் கட்டுப்பாடு காரணமாகவும் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக விசனம் வெளியிட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த வியாபாரி ஒருவர்
சிறு வியாபாரிகள் வவுனியா நகரில் சீனி கொள்வனவு செய்யும்போது 95 ரூபா வீதம் ஐந்து கிலோகிராம் சீனி மாத்திரமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் மூடையாக சீனி பெற்றுக்கொள்ள வேண்டுமானால் கிலோவுக்கு 104 ரூபா வீதம் செலுத்த வேண்டும் என்பதுடன் அதற்கான விலைப்பற்றுச்சீட்டு வழங்க முடியாது என சீனி மொத்த வியாபாரிகள் தெரிவிப்பதாகவும் அதன் காரணமாக நுகர்வோர் பாதுகாப்பு சபையின் கட்டுப்பாட்டு விலையாகிய 95 ரூபாவிற்கு விற்பதற்கு தங்களிடம் போதியளவு சீனி இல்லையென்றும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியாது இருப்பதுடன் தைப்பொங்கல் நெருங்கிவரும் இவ்வேளையில் சீனிக்கான செயற்கையான தட்டுப்பாடு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை மேற்கோள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.