Home புலனாய்வு செய்தி

ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

SHARE

படுகொலைசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜினுடைய மனைவியின் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ. எம். சுமந்திரனால் குறித்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சட்டத்தரணி சுமந்திரன் கருத்து வெளியிடுகையில்,

தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவிற்கான விசாரணைத் திகதி இதுவரை குறிக்கப்படவில்லை. வழங்கிய தீர்ப்பிலுள்ள சட்டவிரோதமான தீர்வுகள் தொடர்பாக இந்த மேன்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பளிக்கும்போது மீள்விசாரணையொன்றை ஏற்படுத்துமாறு இதில் கோரியுள்ளோம் என தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.