Home விளையாட்டு மொகமது இர்பான் விலகியதால் பாகிஸ்தான் அணியில் ஜுனைத் கான் சேர்ப்பு

மொகமது இர்பான் விலகியதால் பாகிஸ்தான் அணியில் ஜுனைத் கான் சேர்ப்பு

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற வெள்ளிக்கிழமை (13-ந்தேதி) தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் அணி கடந்த 30-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதில் உலகின் மிகவும் உயரமான வேகப்பந்து வீச்சாளரான மொகமது இர்பான் இடம்பெற்றிருந்தார்.

13-ந்தேதி தொடங்கும் ஒருநாள் தொடரை எதிர்நோக்கி இருந்த நிலையில் பாகிஸ்தானில் வசித்து வந்த அவரது தாயார் காலமானார். இதனால் அவர் உடனடியாக பாகிஸ்தான் திரும்பினார். இதனால் அவருக்குப் பதிலாக 27 வயதாகும் ஜுனைத்கான் பாகிஸ்தானுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

52 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜுனைத்கான், இதுவரை 78 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் வங்காள தேசத்தில் நடைபெற்ற வங்காளதேச பிரிமீயர் லீக்கில் 14 போட்டியில் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 13-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. 2-வது போட்டி 15-ந்தேதி மெல்போர்னிலும், 3-வது போட்டி பெர்த்தில் 19-ந்தேதியும், 4-வது போட்டி சிட்னியில் 22-ந்தேதியும், 5-வது மற்றும் கடைசி போட்டி அடிலெய்டில் 26-ந்தேதியும் நடக்கிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.