Home மருத்துவம் பத்மாசனம்(யோகாசன மருத்துவம்)

பத்மாசனம்(யோகாசன மருத்துவம்)


சமமான தரையில் ஜமக்காளம் போன்ற ஏதாவது ஒரு விரிப்பை போட்டு உட்கார வேண்டும்.பிறகு கால்களை நன்றாக நீட்டித் தளர்த்த வேண்டும்.முதலில் வலது காலை இழுத்து மடித்து இடது தொடையின் மீது வைக்க வேண்டும்.பிறகு அதேபோன்று இடது காலை படிய மடித்து வலது தொடையின் மீது வைக்க வேண்டும்.குதிகால்கள் இருபுறமும் அடிவயிற்றை நன்கு தொட்டுக் கொண்டிருப்பது போல் அமைவதுதான் சரியான நிலையாகும்.முதுகைச் சற்றும் கோணல் இல்லாத நிலையில் நன்றாக நிமிர்த்தி கைவிரல்களை சின் முத்திரையில் இரு முழங்கால்களின் மீது நேராக வைத்துக் கொள்ள வேண்டும்.கண்கள் மூக்கு நுனியைக் கூர்மையாக நோக்க வேண்டும்.இந்த நிலையில் சில நிமிட நேரம் இருந்த பிறகு மெதுவாகக் கால்களை விடுவித்து முதல் நிலைக்கு வர வேண்டும்.இந்த ஆசனத்தில் ஈடுபட்டிருக்கும் போது முழு மனதையும் இருதயத்தில் நிலை நிறுத்தியிருக்க வேண்டும்.இந்த ஆசனத்தைச் செய்து முடிப்பதற்கு ஒன்று முதல் ஜந்து நிமிடங்கள்வரை பயிற்சி பழக்கத்துக்கு ஏற்ப கால அளவு எடுத்துக் கொள்ளலாம்.நுரையீரலின் இயக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் இது சிறப்பான ஆசனமாகப் பயன்படுகிறது.முழங்கால் மூட்டுகள் தொடர்பான பிணிகளை இது விலக்குகிறது.தொடைப்பகுதியும் குதிக்கால் நரம்புப் பகுதியும் இதனால் வலுவடையும் உடலிலும் மனதிலும் சுறுசுறுப்பான உணர்வு மேலாட இது உதவுகிறது.தியான நிலைக்கு மிகவும் வசதியான ஆசனமுறை இது.மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான பயிற்சிக்கு இந்த ஆசனம் நல்ல முறையில் பலனைத் தரும்.பத்மாசன முறையில் பயிற்சி பெற்றுவிட்ட பிறகு தரையில் உட்கார வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பத்மாசன அடிப்படையிலே அமருவது நல்ல வழக்கமாக இருக்கும்.

மருத்துவக் குறிப்பு-அபி