Home வவுனியா செய்திகள் எமது மண் எமக்கு வேண்டும் இரண்டாவது நாளாக வவுனியாவில் தொடர் போராட்டம்!!(போட்டோ,வீடியோ இணைப்பு)

எமது மண் எமக்கு வேண்டும் இரண்டாவது நாளாக வவுனியாவில் தொடர் போராட்டம்!!(போட்டோ,வீடியோ இணைப்பு)

 

 

 

வவுனியா பாரதிபுரம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட விக்ஸ் காட்டுப்பகுதியில் வசித்து வரும் 47 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தாங்கள் வசிக்கும் காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று இரண்டாவது நாளாக வவுனியா மாவட்டசெயலகத்திற்கு முன்னால் முற்றுகைப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

விக்ஸ் காட்டுப்பகுதியில் கடந்த 9 வருடங்களாக வசித்து வருவதுடன்தாம் தொடர்ந்தும் வன இலாகாவினரால் தொந்தரவுக்குள்ளாகுவதாகவும் தாம் வாழும் காணியை தமக்கு வழங்குவதற்கான வாக்குறுதி பலராலும் வழங்கப்ட்டபோதும் இது வரை எது வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தே இம் மக்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நேற்றிலிருந்து அரசியல்;வாதிகளோ! அல்லது அதிகாரிகளோ தங்களை வந்து பார்க்கவில்லைஎன்றும் அதன் காரணமாக பிராதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகவும் எச்சரித்தனர்.