Home மருத்துவம் பூசணிக்காய் விதை சாப்பிடுவதால் நன்மைகளோ ஏராளம்!!

பூசணிக்காய் விதை சாப்பிடுவதால் நன்மைகளோ ஏராளம்!!

பூசணிக்காயில் உள்ள சத்துக்களை போலவே பூசணிக்காய் விதையிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

எனவே நாம் பூசணிக்காய் விதையை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் இதோ

பூசணிக்காய் விதையின் மருத்துவ நன்மைகள்
  • பூசணி விதைகளை காயவைத்து, பொடி செய்து, அந்த பொடியை ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து சாப்பிட்டால், நமது உடலின் வலிமை அதிகரிக்கும்.
  • பூசணி விதையில் உள்ள மக்னீசிய சத்துக்கள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது.
  • பூசணி விதையில் உள்ள துத்தநாகச் சத்துக்கள், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இந்த விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆண்மையின்மை பிரச்சனையை குணப்படுத்துகிறது.
  • பெண்கள் பூசணி விதையை நெய்யில் வறுத்து அதை தினமும் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் குணமாகும்.
  • பூசணி விதையைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன், விந்தின் திறன் அதிகரிக்கும். மேலும் பூசணி விதையில் கஷாயம் செய்து குடித்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும்.
  • பூசணி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், நமது உடம்பில் இரசாயன் தாக்கத்தை தடுத்து, ஹார்மோன் மற்றும் நாளமில்லா சுரப்பிகளைக் கட்டுப்படுத்தி, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.