Home யாழ் செய்தி 110-ஆவது நாளை எட்டியது கேப்பாபிலவு தொடர் போராட்டம்!

110-ஆவது நாளை எட்டியது கேப்பாபிலவு தொடர் போராட்டம்!

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 110 ஆவது நாளை எட்டியுள்ளது.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி சொந்த நிலத்துக்கு செல்வதற்கான தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்துக்கு முன்பாக மக்கள் ஆரம்பித்திருந்தனர். எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் மூன்று மாதங்களை கடந்தும் தொடர் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கொடுத்த வாக்குறுதி இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை