Home இந்திய செய்திகள் வாடகைத் தாய் விற்பனை: ஐதரபாத்தில் 46 பேர் மீட்பு

வாடகைத் தாய் விற்பனை: ஐதரபாத்தில் 46 பேர் மீட்பு

ஐதராபாத்: பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சாய் கிரண் குழந்தை பேறு மருத்துவமனையில் வாடகைத் தாய் 46 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் சாய் கிரண் என்ற குழந்தை பேறு மருத்துவமனை செயல்பட்டு வந்தது.

இங்கு சட்டவிரோதமாக வாடகைத் தாய்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடம் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.

இதன் அடிப்படையில் தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் சாய் கிரண் மருத்துவமனையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில், 46 வாடகைத் தாய்மார்கள் 9 மாதம் கர்ப்பமாக மருத்துவமனைக்குள் இருப்பதையும், கடந்த 9 மாதமாக அவர்கள் அங்கேயே அடைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற சாய் கிரன் மருத்துவமனை போதிய அனுமதி பெறவில்லை என்பதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மீட்கப்பட்ட வாடகைத் தாய்மார்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்த விசாரணையில், இரண்டரை லட்சம் ரூபாய் முதல் மூன்றரை லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து தங்களை குழந்தை பெற்றுக் கொடுக்க சாய் கிரண் மருத்துவமனை அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.