Home உள்ளூர் செய்தி சைட்டத்துக்கு எதிராக மீண்டும் ஆரம்பமாகும் போராட்டம்

சைட்டத்துக்கு எதிராக மீண்டும் ஆரம்பமாகும் போராட்டம்

மாலபே சைட்டத்துக்கு எதிராக இன்று கொழும்பு- கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பு சத்தியக்கிரகம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்திய பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் இந்த சத்தியகிரகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சைட்டம் தனியார் கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு விரைவான தீர்வினைக் கோரி இவர்கள் இன்று சத்தியகிரகத்தில் ஈடுபடுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை அதிபர் தர பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாதம் 28ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்-அதிபர் முன்னணி சங்கம் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.