Home சமூக சீர்கேடு பாடசாலை மாணவிக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய நபரொருவர் கைது

பாடசாலை மாணவிக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய நபரொருவர் கைது

பாடசாலை மாணவிக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு, பதவிகம பிரதேசத்தில் வசித்துவரும் திருமணமாகாத இளைஞனொருவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பாடசாலை விட்டு மாணவிகள் சிலர் செல்லும் போது அவர்களிடம் இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். சுமார் ஒன்றரை மாதங்களாக இவ்வாறு நடந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் பின்னர் நீதிபதியினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரை அரச மனநல வைத்தியரிடம் அனுமதித்து அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.