Home பிரதான செய்திகள் உங்களின் இயலாமையை புரிந்துகொள்ள முடிகின்றது! சம்பந்தனுக்கு விக்கி கடிதம்

உங்களின் இயலாமையை புரிந்துகொள்ள முடிகின்றது! சம்பந்தனுக்கு விக்கி கடிதம்

வடமாகாண சபையில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள இரு அமைச்சர்களும் தங்கள் சம்பளத்தை பெற்றுக்கொள்ளவும், அரச வாகனங்களை பயன்படுத்துவதற்கும் உரிமை உண்டு என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குறித்த இருவருக்கும் எதிராக புதிய குற்றச்சாட்டுக்களும் உள்ளன. இந்நிலையில், அமைச்சர்கள் இருவர் தொடர்பில் உத்தரவாதம் வழங்குவதற்கான உங்களது இயலாமையை புரிந்துகொள்கின்றேன்.

எனினும், அவர்களுக்கு தேவையான ஆலோசனையை வழங்கியமைக்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக” அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடமாகாண அமைச்சர்களான பா.சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் தொடர்பில் உத்தரவாதம் ஒன்றை நிச்சயம் தரப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.