Home நிகழ்வுகள் களம் பல கண்ட கடற்புலி மகளிர் அணியினரின் போர்க்கப்பல் இடம் மாறுகிறது!

களம் பல கண்ட கடற்புலி மகளிர் அணியினரின் போர்க்கப்பல் இடம் மாறுகிறது!

முல்லைத்தீவு புதுமாத்தளன் இராணுவக் கண்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் சக்திவாய்ந்த போர்க்கப்பல் ஒன்று இன்றைய தினம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

“இசையரசி” என்ற பெயர் பொறித்த கடற்புலிகளின் மகளிர் அணியினரின் போர்க்கப்பலே இவ்வாறு இடம்மாற்றப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் போர்த்தளபாடங்கள் சிலவற்றை இராணுவத்தினர் காட்சிப்படுத்தியிருந்தனர். அவற்றை மக்களும் வெளிநாட்டவரும் வியந்து பார்த்து புலிகளின் போர்த் திறனைப் பேசிவருகின்றமை தெரிந்ததே.

இன்றையதினம் இந்த போர்க் கப்பலை ஸ்ரீலங்கா இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் பிற்பகல் வேளையில் நகர்த்தியுள்ளனர்.

இசையரசி போர்க்கப்பல் கடற்புலி மகளிர் அணியினரால் ஸ்ரீலங்கா கடற்படையினருடனான நேரடி கடற் சமர்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும். இதனை இன்றைய தினம் இராணுவம் பார ஊர்தியில் ஏற்றி நகர்த்திய போது மக்கள் ஏக்கத்துடன் பார்த்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகிறார்.