Home உள்ளூர் செய்தி காவல்துறை அதிகாரம் எமது கைகளுக்கு வரவேண்டுமானால் அதிகளவான தமிழ் இளைஞர், யுவதிகள் காவல்துறையில் இணையவேண்டும்!

காவல்துறை அதிகாரம் எமது கைகளுக்கு வரவேண்டுமானால் அதிகளவான தமிழ் இளைஞர், யுவதிகள் காவல்துறையில் இணையவேண்டும்!

காவல்துறை அதிகாரம் எமது கைகளுக்கு வரவேண்டுமானால் அதிகளவான தமிழ் இளைஞர்,யுவதிகள் காவல்துறையில் இணையவேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சருக்கும், பிரதிக் காவல்துறைமா அதிபர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குமிடையில் இன்று முதலமைச்சர் இல்லத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், காவல்துறைக்கு 500 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதில் இணைந்துகொள்வதற்கு தமிழ் இளைஞர், யுவதிகள் முன்வரவேண்டும்.

அத்துடன் அண்மையில் மணற்காட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபருடன் கலந்துரையாடியபோது தமிழ் காவல்துறையினரின் ஆளணிப் பற்றாக்குறை எனத் தெரிவித்தார்.

காவல்துறையில் தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் இதற்கு அவர்கள் இணங்குவதில்லை.

காவல்துறை சேவையில் தெற்கில் உள்ளவர்களை அனுமதிப்பதனால், பாதிப்பு எமக்கு தான். இதுவரை காலமும் காவல்துறை மீதான அபிப்பிராயம் தவறாக இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போது, அதிகாரம் எமது கையில் வர வேண்டுமென்றால், தமிழ் இளைஞர்கள் பொலிஸ் அதிகாரத்தினை பெற்றுக்கொள்ளும் இடத்தில் இருக்க வேண்டும்.

தமிழ் பொலிஸாரின் எண்ணிக்கைகளை கூட்டினால், இங்குள்ள சிங்கள பொலிஸாரின் எண்ணிக்கையினை குறைக்க முடியும்.

எமது எண்ணிக்கையினை அதிகரித்தால், எமது ஆதிக்கத்தினை செலுத்த முடியுமென எமது இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.