Home விளையாட்டு இந்தியாவுடன் கிரிக்கெட் போட்டி; பயத்தில் புலம்பும் முரளிதரன்.!

இந்தியாவுடன் கிரிக்கெட் போட்டி; பயத்தில் புலம்பும் முரளிதரன்.!

இலங்கை கிரிக்கெட் அணியானது, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 3-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. மேலும், தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி திணறி வருகின்றது. ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்ததும், அதிர்ச்சியில் கேப்டன் பொறுப்பிலிருந்து மேத்தீவ் விலகினார்.

இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது இலங்கை அணி. இந்தியாவுடன் 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது இலங்கை கிரிக்கெட் அணி.

இந்நிலையில் இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் “இலங்கை அணியை மீண்டும் பழைய படி சிறந்த அணியாக்க முன்னாள் வீரர்களான சங்ககாரா, ஜெயவர்த்தனே அல்லது நான் தான் ஏதாவது செய்தாக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், தோனியுடனான ஐபிஎல் விளையாட்டின் போதான அனுபவங்கள் மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.