Home சர்வதேச செய்தி முடியுமென்றால் பொருளாதார தடைகள் விதித்து பாருங்கள் – வடகொரியா எச்சரிக்கை

முடியுமென்றால் பொருளாதார தடைகள் விதித்து பாருங்கள் – வடகொரியா எச்சரிக்கை

வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் பட்சத்தில் அதற்குரிய தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடகொரிய வெளிவிவகார அமைச்சர் ரி சு சூங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி வடகொரியா நடத்திய ஏவுகணை பரிசோதனையை அடுத்து புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தீவிரம் காட்டி வருகின்றது.

இந்த நிலையிலேயே வடகொரிய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அமெரிக்காவின் அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே தாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்ததாக தெரிவித்துள்ளார்.

நாட்டை பாதுகாப்பது வட கொரியாவின் சட்டப்பூர்வ உரிமை என தெரிவித்துள்ள அவர், வடகொரியா மீது புதிய தடைகள் விதிக்கப்படும் பட்சத்தில் அதற்கு தகுந்தாற்போல் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.