Home யாழ் செய்தி பருத்­தித்­துறை வீடு புகுந்து திருடியவர்கள் பொலிஸில்

பருத்­தித்­துறை வீடு புகுந்து திருடியவர்கள் பொலிஸில்

பருத்­தித்­துறை அம்­ப­னில் வீடு புகுந்து பொருள்­கள் பணம் திரு­டிக்­கொண்­டி­ருந்த குற்­றச்­சாட்­டில் வீட்­டுக்­குள் வைத்து 3 பேர் பிர­தேச மக்­க­ளால் மடக் கிப் பிடிக்­கப்­பட்­ட­னர்.

அவர்­கள் விசா­ர­ணைக்காகத் தம் மி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று பருத்­தித்­து­றைப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

“நேற்­று­மாலை 5 மணி­ய­ள­வில் சம்­ப­வம் இடம்­பெற்­றது. அடுத்­த­டுத்­துள்ள 2 வீடு­க­ளில் பொருள்­கள், பணம் திருடி மூன்­றா­வது வீட்­டுக்­குள் சமை­ய­ல­றைப் புகைக்­கூட்­டி­ னூ­டாக உள்­நு­ழைந்து திரு­டிக்­கொண்­டி­ருந்­த­போது அய­ல­வர்­கள் சேர்ந்து மூவ­ரை­யும் பிடித்­த­னர்.

அவர்­கள் குடத்­த­னை­யைச் 15,16, மற்­றும் 17 வய­து­டை­ய­வர்­கள். முன்­னர் இடம்­பெற்ற சில சம்­ப­வங்­க­ளு­டன் அவர்­கள் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக ஆரம்ப விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளன. விசா­ர­ணை­க­ளின் பின்­னர் அவர்­கள் நீதி ­மன்­றில் முற்­ப­டுத்­தப்ப­டு­வர்” என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.