Home இந்திய செய்திகள் பாகிஸ்தான், சீனாவுடன் எல்லையில் பதற்றம், இந்தியா போருக்கு தயாராக வேண்டும்: ராணுவ தளபதி

பாகிஸ்தான், சீனாவுடன் எல்லையில் பதற்றம், இந்தியா போருக்கு தயாராக வேண்டும்: ராணுவ தளபதி

இந்தியா போருக்கு தயாராக வேண்டும் என்று ராணுவ தளபதி ‘பிபின் ராவத்’ கூறியுள்ளார்.

இந்திய எல்லையில், பாகிஸ்தான் ராணுவமும், சீனா ராணுவமும் தொடர்ந்து அத்துமீறி வருகின்றது. இதனால் இரண்டு நாட்டு எல்லைகளிலும், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகின்றது.

பாகிஸ்தான், சீனாவுடன் எல்லையில் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவிவருவதால், இந்தியா போருக்கு தயாராக வேண்டும் என்று ராணுவ தளபதி ‘பிபின் ராவத்’ கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், ராணுவ தளபதி ‘பிபின் ராவத்’ கலந்து கொண்டு பேசினார். அங்கு அவர் பேசியதாவது:–

டோக்லாம் பிரச்சினை, பல நாட்களாக நீடித்து வருகின்றது. இந்த பிரச்சனையில் சீனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

“பாகிஸ்தான் நாட்டுடன் சுமூக உறவு ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை” என்று தோன்றுகிறது.

பாகிஸ்தான், சீன உடனான மோதல், ஒருகட்டத்தில் முழு அளவிலான போராக உருவெடுக்கக்கூடும்.

எனவே, இந்தியா இருமுனை போருக்கு தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.