புருசனை விட்டு இளைஞனுடன் தங்கிய யாழ்ப்பாண பத்தினி!! கற்பழித்துவிட்டான் என கதறினார்!! இளைஞன் விளக்கமறியலில்!!

குடும்ப பெண்ணொருவரை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியவனை இம்மாதம் 31 ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் இன்று ( 24.10.17) கட்டளையிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது:-
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவரின் கணவன் குடும்ப நிலமையை கருத்தில் கொண்டு தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்றுள்ளார். அதன் பின் அப்பெண் மன்னார் பகுதியை சேர்ந்த ஆடவன் ஒருவனுடன் நட்பாக பழகியுள்ளார். அதன்பின் அந்த ஆடவனின் அழைப்பை ஏற்று குறித்த பத்தினி படி தாண்டி வவனியா பிரதேசத்துக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அப்பெண்ணை அவ் ஆடவன் முச்சக்கர வண்டியொன்றில் கடத்திச் சென்று விடுதியொன்றில் வைத்து கற்பழித்ததாக அவரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டான். இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டவேளை அவ் இளைஞனை இம்மாதம் 31ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Advertisement