Home சுவிஸ்லாந்து செய்திகள் இறுதி கிரியைகளில் கலந்துகொள்ள இலங்கையிலிருந்து சுவிஸ் சென்றவர்களின் செயல்!

இறுதி கிரியைகளில் கலந்துகொள்ள இலங்கையிலிருந்து சுவிஸ் சென்றவர்களின் செயல்!

சுவிட்ஸர்லாந்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை புகலிட கோரிக்கையாளரின் இறுதி கிரியைகளில் கலந்துகொள்வதற்கு சுவிஸ் சென்ற உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் அந்நாட்டில் அகதி தஞ்சம் கோரியுள்ளனர்.

சுவிஸில் கொல்லப்பட்ட இலங்கை புகலிட கோரிக்கையாளரின் மனைவி, இரண்டு மகள்மார்களும் அந்நாட்டில் அகதி தஞ்சம் கோரியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இறுதி கிரியைகளில் கலந்துகொள்வதற்கு சுவிஸ் சென்ற உயிரிழந்தவரின் சகோதரரின் இருப்பிடம் தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரியவில்லை என அந்நாட்டு அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

முல்லைத்தீவை சேர்ந்த தமிழ் இளைஞரான சுப்ரமணியம் கரன் (வயது 38) என்பவர் கடந்த 6ஆம் திகதி சுவிட்ஸர்லாந்து டிசினோ மாகாணத்தில் உள்ள அகதி முகாம் ஒன்றில் வைத்து பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் இறுதி கிரியைகளில் கலந்துகொள்வதற்காக குறித்த நபரின் மனைவி, இரண்டு மகள்மார்கள் மற்றும் அவரது சகோதரன் ஆகியோரை சுவிஸ் அரசாங்கம் அந்நாட்டிற்கு அழைத்து சென்றிருந்தது.

இந்நிலையிலேயே, அவர்கள் சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் தூதுவர் கருத்து தெரிவிக்கையில்,

“இவ்வாறு நடக்க கூடும் என்பதை அறிந்திருந்தோம். உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் சுவிஸில் உள்நுழைவதற்கு சம்பந்தமான முடிவெடுக்கும் போது மனிதாபிமான காரணங்களே முன்னின்றன.

குறைந்தபட்ச ஒரு குறிப்பிட்ட கால அளவைக்கொண்டே (ஐந்து நாட்கள்) நுழைவு அனுமதியை கொடுத்து அவர்களை சுவிஸிற்கு வரவழைத்தோம்.

அவர்கள் அகதி தஞ்சம் கோராமல் இருப்பதற்கு எங்களால் இயன்ற அனைத்தையும் செய்தோம். அப்படியிருந்தும் இவ்வாறு நடந்துவிட்டது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர்களுடன் பேசி வருவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.