Home சமூக சீர்கேடு வித்தியா கொலையில் சுவிஸ் பிரஜை தலைமறைவு…! வெளிக் கிழம்பும் புதிய தகவல்கள்.

வித்தியா கொலையில் சுவிஸ் பிரஜை தலைமறைவு…! வெளிக் கிழம்பும் புதிய தகவல்கள்.

மாணவி வித்தியா கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இவரது பெயர் சசி . சிறுவயதிலே திருமணம் முடித்த இவருக்கு பல குழந்தைகளும் உண்டு .  2004 ஆண்டுகாலபகுதிகளில் போர்நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டதால் புங்குடுதீவில் விடுதலைபுலிகளின் அரசியல் துறையினர் நிலைகொண்டிருந்தனர் .

அக்காலகட்டங்களில் புங்குடுதீவு மிகவும் அமைதியாக காணப்பட்டது .சிறு சிறு குற்றச் செயல்களே இடம்பெற்றாலும் அவற்றுக்கு உடனே அரசியல் துறையினரால் தண்டனைகள் வழங்கப்பட்டன . இந்த சசி என்பவரும் இன்னொரு குற்றவாளியாகிய தில்லை சந்திரகாசனும் , சூரியின் புதல்வரும் நன்றாக பச்சை மட்டையினால் வாங்கி கட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது . பின்னர் சசி கொழும்புக்கு தப்பி ஒடியிருந்தார் .

2010 க்கு பின்னர் இவர்களது சேட்டைகள் புங்குடுதீவில் அதிகரித்திருந்தன . வீடுகளை உடைத்து இரும்புகளை எடுத்து முஸ்லிம் இரும்பு வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வது , பின்னர் அந்த பணத்தில் மதுபானம் அருந்திவிட்டு ஏனைய வட்டார இளைஞர் களுடன் வீண்சண்டை போடுவது , பெண்களை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் .

சசியின் அண்ணன் சுவிஸ் சிலிருந்து அடிக்கடி ஊருக்கு வந்து இவர்கள் அனைவருக்கும் தண்ணி பார்ட்டி வைப்பாராம் . குறிப்பாக தனது பிறந்த நாளினை 20 பேருடன் இணைந்து நயினாதீவு புத்த விகாரை பிரதான பிக்குவிற்கு சொந்தமான ஆடம்பர படகு ஒன்றில் தண்ணியடித்து மகிழ்ந்துள்ளார் . இவர் அகதியாக வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்து செல்ல முன்னர் பனம்பழம் சூப்ப கூட வழியில்லாமல் இருந்துள்ளார் .

சசி தலைமையிலான குரூப் வீண் சண்டைகளில் ஈடுபட்டு போலீஸ் வரைக்கும் வழக்கு சென்றால் பணத்தை செலவழித்து அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி அவர்களை விடுதலை செ.திடுவாராம் . தனது சொந்த தம்பியை புத்திமதி சொல்லி திருத்த வேண்டியவர் செய்திருக்கும் வேலையை பாருங்கள் ! முதலில் இவர் பிணையில் வெளிவரக்கூடும் . அவ்வாறு பிணையில் வெளிவந்தால் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல பார்ப்பார் .அதற்கு முன் அவரது கதையினை ?

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் தனது காதலியை யாழ்ப்பானத்திலிருந்து அழைத்துக்கொண்டு ( ஓடி ) வந்து இங்கே குடித்தனம் நடாத்தியுள்ளார் . இந்த நால்வரும் ( சசி , சந்திரகாசன் உள்ளிட்டோர் ) அந்த இளைஞனை தாக்கி விட்டு அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர் . பின்னர் யாருக்கும் சொல்லக் கூடாது என்றும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

அத்துடன் வித்தியா மானபங்கப்படுத்தப்பட்டு கொலை செய்ததில் ஒன்பது நபர்களை கைது செய்துள்ளதாகவும் 10வது குற்றவாளியான சுவிஸ் பிரஜை தலைமறைவாகியுள்ளதுடன் குறித்த நபர் கண்டிப் பகுதியில் பதுங்கியுள்ளதாக வடமாகாணத்திற்கு பெறுப்பான குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.Tevu 001Tevu 002Tevu 003Tevu 004Tevu 001Tevu