சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் பில்லியனர்கள்: முதலிடத்தில் யார் தெரியுமா?

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒட்டு மொத்த பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு சுமார் 60 பில்லியன் பிராங்க்என அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள சுமார் 300 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 674 பில்லியன் பிராங்க் என ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் இந்த ஆண்டு மட்டும் குறிப்பிட்ட செல்வந்தர்களின் சொத்து மதிப்பில் சுமார் 60 பில்லியன் பிராங்க் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Advertisement

குறித்த பட்டியலில் முதலிடத்தில் Kamprad ( ikea ) குடும்பத்தினர் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு 49 பில்லியன் பிராங்க் என தெரிய வந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் 29 பில்லியன் சொத்து மதிப்புடன் Jorge Lemann உள்ளார். 3-வது இடத்தில் Hoffmann-Oeri குடும்பத்தினர் உள்ளனர்.

முதல் 10 இடங்களில் உள்ள பெரும் செல்வந்தர்களில் இந்த ஆண்டு சுவிஸ் அரசியல்வாதியும் தொழிலதிபருமான Christoph Blocher இடம்பிடித்துள்ளார்.

மட்டுமின்றி இளம் செல்வந்தர்கள் பட்டியலில் பிரபல கார் பந்தைய வீரரான செபஸ்டியன் வெட்டல் இடம் பிடித்துள்ளார். இவரது சொத்துமதிப்பு சுமார் 200 மில்லியன் பிராங்க் என கூறப்படுகிறது.

சுமார் 100 மில்லியன் மற்றும் அதற்கும் மேல் சொத்துமதிப்பு உள்ள நபர்களை பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள 300 நபர்களின் ஆண்டு வருவாய் சராசரி 2.25 பில்லியன் பிராங்க் எனவும், மட்டுமின்றி கடந்த 30 ஆண்டுகளில் இது 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.