பொலிஸார் தாக்குதல், மருத்துவமனையில் வித்தியாவின் தாயார்.

vithiya_jaffna_20_007யாழ் நீதி மன்றத்திற்கு வருகை தந்த வித்தியாவின் தாய் பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதலில் சிக்கி மயக்கமுற்ற நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வித்தியாவை பலாத்காரம் செய்து படுகொலை செய்த குற்றவாளிகள் இன்று 12 மணிக்கு யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில் இன்று நீதிமன்றை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டனர்.

பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதால் கலகம் அடக்கும் பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலிலேயே நீதிமன்றத்திற்கு வருகை தந்த வித்தியாவின் தாயாரும் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இதே வேளை பொலிசாரால் நீதிமன்றப் பகுதியில் வைத்து 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.