வித்தியா கொலையில், சுவிஸ் ஆசாமி கம்பிக்குள்….

image (1)யாழ்ப்பாணம் புங்குடு தீவு பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்ட வித்தியா எனும் பாடசாலை மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் பிரஜை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் வித்தியா எனும் பாடசாலை மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

இவரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் எட்டு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் சுவிஸ் நாட்டு பிரஜையான மகாலிங்கம் சசிக்குமார் வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

Advertisement

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் துவாரகேசஸ்வரனினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் நேற்றைய தினம் (புதன்கிழமை) யாழ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் (வியாழக்கிழமை) ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.