Home சினிமா 41 வயதிலும் இப்படியா.. மொத்த கேமிராவையும் தன் பக்கம் திருப்பிய ஐஸ் (photos)

41 வயதிலும் இப்படியா.. மொத்த கேமிராவையும் தன் பக்கம் திருப்பிய ஐஸ் (photos)

68-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் 40 வயதை கடந்தும் அழகு தேவதையாக வந்து அனைத்து கேமிராக்களையும் தன் பக்கம் திரும்ப வைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

இந்த வருடத்திற்கான 68ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கேன்ஸ் நகரில் கடந்த மே 13ஆம் திகதி தொடங்கியது. இவ்விழாவில் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வருகின்றனர். இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர்.

இவ்விழாவில் விருதுக்கு நிகரான சிறப்பு பெறுவது நடிகைகளும் அவர்களது உடைகளும் தான். புதுப்புது டிசைனில், புது உடைகள் அணிந்து ரெட் கார்பெட்டில் அவர்கள் பவனி வருவதே அட்டகாசமாக இருக்கும். அந்தவகையில் நடிகை ஐஸ்வர்யா ராய் 14 ஆண்டுகளாக கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டு வருகிறார். இதனால் இந்திய ரசிகர்களால் மட்டுமின்றி, உலகின் மற்ற நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களும் எதிர்பார்க்கக்கூடிய ஒருவராக இருந்து வருகிறார்.

கடந்த ஒரு சில வருடங்களாக குழந்தை பிறந்தபிறகு அவர் அவ்வளவாக சோபிக்கவில்லை. ஆனால் இந்தவருடம் ஐஸ்வர்யாராய் கச்சிதமான உடலுடன், அழகான ஆடைகள் உடுத்தி மொத்த கேமராக் கண்களையும் தன்மீது வளைத்துக்கொண்டார்.

அவரை பார்த்த பலரும் 40 வயதை கடந்தும் எப்படி இவ்வளோ அழகாக ஐஸ்வர்யா ஜொலிக்கிறார் என்று தான் முனுமுனுத்தனர்.
கேன்ஸ் பட விழாவில் அழகு தேவதையாக பவனி வந்த ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

558-418-00aishwarya-kiss

550-302-aishwarya-rai-bachchan

550-332-00aishwarya-rai-canes

28E85B6D00000578-0-image-m-95_1432152063346

aishwarya-rai-bachchan

Jazbaa+Photocall+68th+Annual+Cannes+Film+Festival+M4ZBT0uqtsix