வித்தியா விடயத்தில் ஆமி இல்லாததால் தப்பித்தோம்! “SP” நிம்மதி பெருமூச்சு

vithiya-002புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி கொலைக்கு நீதி கேட்டு வடக்கில் நடந்துவரும் போராட்டங்களை பிரி­வி­னை­யாகவோ, இன­வா­த­மா­கவோ பார்க்­க­வேண்­டி­ய­தில்லை.

அவற்றால் தென்­னி­லங்கை மக்கள் அச்சம் கொள்­ள­வேண்­டிய அவ­சியம் இல்லை என்பதே ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சியின் நிலைப்பாடு என கூறியுள்ளார் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா.

அத்துடன், இந்த பாதகத்தை இராணுவமோ, பொலிசாரோ செய்யாமல் தமிழர்களே செய்துள்ளதால் தப்பித்து விட்டோம் என்று நெஞ்சில் கைவைத்து, நிம்மதிப் பெருமூச்சும் விட்டுள்ளார்.

Advertisement

கொழும்பில் அமைந்­துள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று நடந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பிலேயே இதவற்றை தெரிவித்தார்.அமைச்சர் எஸ்.பி, தொடர்ந்தும் கூறி­ய­தா­வது- ‘புங்­கு­டு­தீவில் எமது சகோ­த­ர பாட­சாலை மாணவி கூட்டு பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படுகொலை செய்­யப்­பட்­ட­மை­யா­னது கடும் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும்.

அந்த சிறு­மிக்கு இழைக்­கப்­பட்ட கொடு­மைக்கு எதி­ராக வட­மா­காணம் எங்கும் ஆர்ப்­பாட்டம் செய்­யப்­ப­டு­கின்­றது. அதில் நியா­ய­முள்­ளது.

எனினும் ஆர்ப்­பாட்டத்தில் ஈடு­ப­டு­ப­வர்கள் சட்­டத்தைக் கையி­லெடுத்து பொலிஸார், இரா­ணு­வத்­தினர் மற்றும் நீதி­மன்­றத்தை தாக்­கு­வ­தனால் அப்­பி­ரச்­சி­னைக்கு நீதி­யான தீர்­வொன்றைப் பெற்­று­வி­ட­மு­டி­யாது.

சட்டம் ஒழுங்கு மீறப்­பட்­டுள்­ள­மை­யினால் பொலிஸார் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது.அவ்வாறான செயற்­பாட்டை இன­வா­த­மாக எவரும் பார்க்க முடி­யாது.

வடக்கில் பிரச்­சி­னை­யொன்று காணப்­ப­டு­கின்­ற­மை­யா­னது தென்­னி­லங்­கை­யர்­க­ளா­கிய எமக்கும் கவ­லை­ய­ளிப்­ப­தா­கவே உள்­ளது.இவ்­வா­றான பிரச்­சி­னைகள், முன்­னெ­டுக்­கப்­படும் ஆர்ப்­பாட்­டங்கள் மூலம் பிரி­வி­னை­வாத விடு­தலை இயக்­கங்கள் மீண்டும் தலைதூக்­கு­வ­தற்­கான வாய்­ப்புக்கள் ஏற்­படும் என்ற மன­நிலை தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றது.

இவ்­வி­ட­யத்தை மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யி­லேயே பார்க்­க­வேண்டும்.மேலும் இவ்­வா­றான குற்றத்தை புரிந்­தவர்கள் அப்­பி­ர­தே­சத்தை சேர்ந்­த­வர்க­ளாகவே இருக்­கின்­றார்கள்.

அவ்­வாறி­ல்லாது இரா­ணு­வமோ அல்­லது பொலிஸாரோ இவ்­வா­றான குற்­றத்தை புரிந்திருப்பார்களாயின் பிரச்சினையை வேறுவடிவத்தில் அரசியல்வாதிகள் முன்னெடுத்திருப்பார்கள்.

எது எவ்வாறாயினும் அப்பாடசாலை மாணவிக்கு நிகழ்ந்த அகோரத்திற்கு உரிய வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதி கிடைக்கவேண்டும்.

எமது நாட்டுச் சட்டங்களுக்கு அமைய தண்டனை வழங்கப்படவேண்டும் என்றார்.

புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி கொலைக்கு நீதி கேட்டு வடக்கில் நடந்துவரும் போராட்டங்களை பிரி­வி­னை­யாகவோ, இன­வா­த­மா­கவோ பார்க்­க­வேண்­டி­ய­தில்லை.

அவற்றால் தென்­னி­லங்கை மக்கள் அச்சம் கொள்­ள­வேண்­டிய அவ­சியம் இல்லை என்பதே ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சியின் நிலைப்பாடு என கூறியுள்ளார் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா. அத்துடன், இந்த பாதகத்தை இராணுவமோ, பொலிசாரோ செய்யாமல் தமிழர்களே செய்துள்ளதால் தப்பித்து விட்டோம் என்று நெஞ்சில் கைவைத்து, நிம்மதிப் பெருமூச்சும் விட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்­துள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று நடந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பிலேயே இதவற்றை தெரிவித்தார்.

அமைச்சர் எஸ்.பி, தொடர்ந்தும் கூறி­ய­தா­வது- ‘புங்­கு­டு­தீவில் எமது சகோ­த­ர பாட­சாலை மாணவி கூட்டு பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படுகொலை செய்­யப்­பட்­ட­மை­யா­னது கடும் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும். அந்த சிறு­மிக்கு இழைக்­கப்­பட்ட கொடு­மைக்கு எதி­ராக வட­மா­காணம் எங்கும் ஆர்ப்­பாட்டம் செய்­யப்­ப­டு­கின்­றது. அதில் நியா­ய­முள்­ளது.

எனினும் ஆர்ப்­பாட்டத்தில் ஈடு­ப­டு­ப­வர்கள் சட்­டத்தைக் கையி­லெடுத்து பொலிஸார், இரா­ணு­வத்­தினர் மற்றும் நீதி­மன்­றத்தை தாக்­கு­வ­தனால் அப்­பி­ரச்­சி­னைக்கு நீதி­யான தீர்­வொன்றைப் பெற்­று­வி­ட­மு­டி­யாது. சட்டம் ஒழுங்கு மீறப்­பட்­டுள்­ள­மை­யினால் பொலிஸார் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது.

அவ்வாறான செயற்­பாட்டை இன­வா­த­மாக எவரும் பார்க்க முடி­யாது. வடக்கில் பிரச்­சி­னை­யொன்று காணப்­ப­டு­கின்­ற­மை­யா­னது தென்­னி­லங்­கை­யர்­க­ளா­கிய எமக்கும் கவ­லை­ய­ளிப்­ப­தா­கவே உள்­ளது.

இவ்­வா­றான பிரச்­சி­னைகள், முன்­னெ­டுக்­கப்­படும் ஆர்ப்­பாட்­டங்கள் மூலம் பிரி­வி­னை­வாத விடு­தலை இயக்­கங்கள் மீண்டும் தலைதூக்­கு­வ­தற்­கான வாய்­ப்புக்கள் ஏற்­படும் என்ற மன­நிலை தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றது. இவ்­வி­ட­யத்தை மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யி­லேயே பார்க்­க­வேண்டும்.

மேலும் இவ்­வா­றான குற்றத்தை புரிந்­தவர்கள் அப்­பி­ர­தே­சத்தை சேர்ந்­த­வர்க­ளாகவே இருக்­கின்­றார்கள். அவ்­வாறி­ல்லாது இரா­ணு­வமோ அல்­லது பொலிஸாரோ இவ்­வா­றான குற்­றத்தை புரிந்திருப்பார்களாயின் பிரச்சினையை வேறுவடிவத்தில் அரசியல்வாதிகள் முன்னெடுத்திருப்பார்கள்.

எது எவ்வாறாயினும் அப்பாடசாலை மாணவிக்கு நிகழ்ந்த அகோரத்திற்கு உரிய வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதி கிடைக்கவேண்டும். எமது நாட்டுச் சட்டங்களுக்கு அமைய தண்டனை வழங்கப்படவேண்டும் என்றார்.