யாழில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன்

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.

சங்குவேலி வயல் கிணற்றுக்குள் இருந்து சற்று முன்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலிகாமம் மேற்கு சண்டிலிப்பாயிலுள்ள சீரனி அம்மன் கோயிலுக்கு அருகில் வாழும் இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட இளைஞன் 21 – 22 வயதிற்குட்பட்டவர் என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இளைஞனின் சடலத்தில் பலத்த காயங்கள் காணப்படுவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleசிறுமி மீது வல்லுறவு! சிக்கிய குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் விதித்த உத்தரவு!
Next articleயாழ்ப்பாணத்தில் கடனை திரும்ப செலுத்த முடியாமையினால் தம்பதி தற்கொலை