யாழ்ப்பாணத்தில் கடனை திரும்ப செலுத்த முடியாமையினால் தம்பதி தற்கொலை

யாழ்ப்பாணத்தில் கடன் சுமை காரணமாக தம்பதி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி, தென்மராட்சி பிரதேசத்தில் வயோதிப தம்பதியினர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இருவரினதும் சடலங்களும் கிணற்றிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்த தம்பதியினரால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால் தற்கொலை செய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடனை திருப்பி செலுத்த முடியாமலே இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.