இலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கான பரீட்சைகள்

இலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட பகிரங்கப் போட்டிப் பரீட்சை இம்மாதம் 27 ஆம், 28ஆம் திகதிகளிலும், பெப்ரவரி 3 ஆம் திகதியும் மீண்டும் நடைபெறவுள்ளது.

கொழும்பில் 51 பரீட்சை மத்திய நிலையங்களிலும், யாழ்ப்பாணத்தில் 6 பரீட்சை மத்திய நிலையங்களிலும் இந்த பரீட்சைகள் நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இந்த பரீட்சை 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம், 23ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் நடத்தப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்த பரீட்சைகளுக்கு எட்டாயிரத்து 37 பேர் தோற்றவுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்தார்..