Home பிரதான செய்திகள் வித்தியாவைக் கற்பழித்துக் கொன்றவர்கள் ஏன் வெட்டிப் புதைக்கவில்லை – இதோ அதிர்ச்சித் தகவல்

வித்தியாவைக் கற்பழித்துக் கொன்றவர்கள் ஏன் வெட்டிப் புதைக்கவில்லை – இதோ அதிர்ச்சித் தகவல்

Vithiya-03வட பகுதியில் தமிழர்களை கிளரச் செய்யவும் , அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தவும் முதலில் தென்னிலங்கையில் தான் திட்டம்போடப்பட்டது என்ற செய்திகள் கொழும்பில் இருந்து கசிந்த வண்ணம் இருக்கிறது.

புங்குடு தீவு கொலையாளிகள் , ஒன்றும் நேற்று முளைத்தவர்கள் அல்ல. அவர்கள் வித்தியாவை கொலைசெய்துள்ள காட்சிகளை பார்கும்போது இவர்கள் பல கொலைகள், கற்பழிப்புகள் , மற்றும் காணமல் போதலோடு தொடர்புடையவர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. அதுபோக சாதாரண இளைஞர்களால் இதனைச் செய்யவும் முடியாது.

மேலும் கொலைசெய்தவர்கள் ஏன் வித்தியாவை வெட்டிப் புதைக்கவில்லை ? மக்கள் பார்கும்படி ஏன் விட்டுச் சென்றார்கள் என்ற கேள்வியும் எழுகிறது அல்லவா ?

இது இவ்வாறு இருக்க , யாழில் அல்லது அதனை அண்டிய பகுதியில் இதுபோன்ற ஒரு கொலைச் சம்பவத்தை உருவாக்கி அதனூடாக மக்களை கிளரவைத்து அரசியல் லாபம் தேட மகிந்த பினாமிகள் முற்பட்டுள்ளார்கள்.

அவர்கள் தாம் ஆட்சியில் இருந்தவேளை வடக்கில் தாம் நியமித்த பொலிஸ் அதிகாரிகளையும் மற்றும் தமக்கு விஸ்வாசமானவர்களையும் பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. யாரவது ஒரு தமிழ் பெண்ணை பிடித்து இதுபோன்று செய்தால் மக்கள் கிளர்சியடைவார்கள். போராட்டம் வெடிக்கும். உடனே புலிகள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்று தென்னிலங்கையில் கூட்டம் போட்டு பேசுவார் மகிந்தர்.

இதுபோல பல திட்டங்களை மகிந்த தரப்பு தீட்டி , முன்னர் செய்துமுடித்தும் உள்ளார்கள்.

அனால் இங்கே அவர்கள் கணக்கு தப்பாகிவிட்டது . மீடியாக்களில் உடனுக்கு உடன் வெளியான செய்திகள். மக்களை விட மாணவர்கள் போராட்டத்தில் குதித்தது. அரசியல்வாதிகளை இப்போராட்டத்தில் சேரவேண்டாம் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தது.

என்று பல சம்வங்கள் நடந்ததால் மகிந்த எதிர்பார்த்த அளவு இது பலன் தரவில்லை என்று கொழும்பில் உள்ள சகோதர சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.