Home சுவிஸ்லாந்து செய்திகள் சுவிசில் இலங்கையரின் தொகை வீழ்ச்சி!!

சுவிசில் இலங்கையரின் தொகை வீழ்ச்சி!!

சுவிற்சர்லாந்­தில் அடைக்­க­லம் தேடு­வோ­ரின் எண்­ணிக்கை கடந்த ஆண்டு வெகு­வா­கக் குறைந்­துள்­ள­தாக, சுவிஸ் அரச குடி­வ­ர­வுச் செய­ல­கத்­தின் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இலங்­கை­யி­லி­ருந்து அடைக்­க­லம் கோரு­வோ­ரின் எண்­ணிக்கை 38.8 சத­வீத வீதத்­தி­னால் குறை­வ­டைந்­துள்­ளது. 2017ஆம் ஆண்டு சுவிற்­சர்­லாந்­தில் அடைக்­க­லம் கோரி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை, 33.5 வீதத்­தி­னால் குறைந்­தி­ ருக்­கி­றது.

2010ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் அடைக்­க­லம் கோரு­வோர்­க­ளி­டம் இருந்து ஆகக் குறைந்த விண்­ணப்­பங்­கள் கடந்த ஆண்­டி­லேயே கிடைத்­துள்­ளன.

கடந்த ஆண்டு எரித்­ரி­யா­வைச் சேர்ந்த 3 ஆயி­ரத்து 375பேர் அதி­க­ள­வில் சுவி­சில் அடைக்­க­லம் கோரி­யுள்­ள­னர்.

எனி­னும், இது முன்­னைய ஆண்டை விட 35 வீதம் குறை­வா­கும். சிரி­யா­வில் இருந்து ஆயி­ரத்து 951 விண்­ணப்­பங்­கள் கிடைத்­துள்­ளன. இது 9 வீதம் குறைந்­துள்­ளது.

ஆப்­கா­னிஸ்­தா­னைச் சேர்ந்த ஆயி­ரத்து 217 பேர் அடைக்­க­லம் கோரி­யுள்­ள­னர். இது 62 வீத வீழ்ச்­சி­யா­கும். துருக்­கி­யில் இருந்து 852 பேர் சுவி­சில் அடைக்­க­லம் கோரி­யுள்­ள­னர்.

கடந்த ஆண்டைவிட இது 62 வீதம் அதி­க­ரித்­துள்­ளது. சோமா­லி­யா­வில் இருந்து 843 பேர் அடைக்­க­லம் கோரி­யுள்­ள­னர்.இலங்­கை­யி­லி­ருந்து 840 பேர் சுவி­சில் அடைக்­க­லம் கோரி­யுள்­ள­னர். இது 38.8 வீத வீழ்ச்­சி­யா­கும்.